உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோரிக்கைகளை வலியுறுத்தி கடலாடியில் கடையடைப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலாடியில் கடையடைப்பு

கடலாடி: கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலாடியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.தனியார் பஸ்கள் கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் இரவு நேரங்களில் வராமல் மாலை 6:00 மணி முதல் இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டிற்கு சற்று தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் இறக்கி விடுவதைக் கண்டித்தும், கமுதியில் இருந்து கடலாடி வரும் அரசு பஸ் வேம்பார் சென்று வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், இரவு நேரங்களில் சாயல்குடி வர வேண்டிய டவுன் பஸ் முதுகுளத்துாரில் நிறுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தனர்.கடலாடி அரசு தாலுகா மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இவை குறித்து நகர் வர்த்தக சங்கம் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை கடலாடி நகர் வர்த்த சங்கம் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றாத போக்கை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதில் அனைத்து வர்த்தகர்களும் கலந்து கொண்டு ஒட்டுமொத்த கடையடைப்பு செய்தனர்.முதுகுளத்துார் போக்குவரத்து பணிமனையில் இருந்து வந்த அதிகாரிகள் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.விரைவில் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர். நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை