| ADDED : நவ 16, 2025 03:45 AM
ராமநாதபுரம்: பள்ளிக் கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடப்பு ஆண்டிற்குரிய குறுவட்டம் மற்றும், மண்டல அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் 14,17,19 என வயது மற்றும் எடை அடிப்படையில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருபாலருக்கு தனித்தனியாக ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, தொடுமுறை போட்டிகள் நடந்தது. ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேணி ரத்தினம், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் செய்தனர். இப்போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.