உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடி சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., பணி 100 சதவீதம் நிறைவு 10 சதவீதம் நீக்கம்

 பரமக்குடி சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., பணி 100 சதவீதம் நிறைவு 10 சதவீதம் நீக்கம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலாவதாக பரமக்குடி(தனி) சட்ட சபை தொகுதி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் 10 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் தெரிவித்தார். பரமக்குடி சட்டசபை தொகுதி ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர். இதன்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களையும் முந்தைய தீவிர சிறப்பு திருத்தத்துடன் ஒப்பீடு செய்து ஓட்டுச்சாவடி முகவர்களால் படிவங்கள் வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து ராமநாதபுரம் லோக்சபா தொகுதி 4 சட்டசபைகளுக்கு உட்பட்ட பரமக்குடியில் முதலாவதாக 100 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இடம் பெயர்ந்தவர்கள், இறப்பு, இரட்டை வாக்குரிமை, கண்டுபிடிக்க இயலாதவர்கள் உட்பட 10 சதவீதம் வாக்காளர்கள் என சராசரியாக 25 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 90 சதவீதம் பேர் கண்டறியப்பட்டு முழுமையாக பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது விடுபட்டவர்கள் மற்றும் வெளியூர் சென்றவர்கள் திரும்பி வரும் நிலையில், பரிசீலனையின் பேரில் டிச.,11ம் தேதிக்குள் சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே படிவத்தை திரும்ப அளிக்காதவர்கள், மற்றும் பெற்றுக் கொள்ளாதவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியல் டிச., 16ல் வெளியிடப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை