உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை

ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை

முதுகுளத்துார் : முதுகுளத்துார்--பரமக்குடி சாலை மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் தை முதல் தேதியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. குழு தலைவர் குருசாமி தலைமை வகித்தார். குருநாதர் திருமால், துணை குருநாதர் புயல்நாதன் முன்னிலை வகித்தனர்.காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் துவங்கி, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் படி பூஜை, பஜனைகள் நடந்தது. முதுவை சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போன்று முதுகுளத்துார் முருகன் கோயிலில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை, படி பூஜை, அன்னதானம் நடந்தது. முதுகுளத்துார், கமுதி பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் தை மாத சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை