உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி ஆர்ச் அருகில் நெடுஞ்சாலையில் கற்கள்

பரமக்குடி ஆர்ச் அருகில் நெடுஞ்சாலையில் கற்கள்

விபத்துக்கு முன் அகற்றப்படுமாபரமக்குடி: பரமக்குடி ஆர்ச் அருகில் ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் கற்களை கொட்டியுள்ளதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.மதுரை- ராமநாதபுரம் இடையே பரமக்குடி நகராட்சி உள்ளது. இங்கு நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்ட நிலையில் அதிவேக பஸ்கள், ஒன் டூ ஒன் பஸ்கள், சுற்றுலா செல்வோர் மட்டும் நகருக்குள் வருவதில்லை.பரமக்குடி நெடுஞ்சாலை பகுதிகளில் தனியார் அலைபேசி நிறுவனங்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டது. இவை முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் நெடுஞ்சாலை முழுவதும் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.இதையடுத்து ஆர்ச் அருகில் ரோட்டின் இருபுறம் மற்றும் நடுவிலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனு பள்ளி மாணவர்கள் செல்லும் வழியாக உள்ளது.இந்த பள்ளங்களில் வீடு இடித்த கற்களை தற்போது கொட்டி மக்கள் சீரமைத்துள்ளனர். இதனால் டூவீலர் மற்றும் சைக்கிள்களில் செல்லும் மாணவர்கள் தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ