உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உயர்நிலை பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் பாதிப்பு

உயர்நிலை பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் பாதிப்பு

கடலாடி: -கடலாடி அருகே மேலச்செல்வனுார் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் இடநெருக்கடியால் சிரமப்படுகின்றனர்.கடலாடி அருகே மேலச்செல்வனுார் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு துவக்கப்பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில் இயங்குகிறது.6 முதல் 10 வகுப்பு வரை 140 மாணவ மாணவியர்களும், தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்களும் உள்ளனர். தொடக்கப் பள்ளிக்குரிய கட்டட வளாகத்தில் உள்ள சிறிய கட்டடத்தில் உயர்நிலைப்பள்ளியின் வகுப்பறை இயங்கி வருவதால் இட நெருக்கடியால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். கடந்த 2007ல் புதியதாக 5 ஏக்கரில் மேலச்செல்வனுார் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் பள்ளிக்கு புதிய இடம் வாங்கப்பட்டு சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது.6 முதல் 10 வகுப்பு உள்ள மாணவர்களுக்கு கால்பந்து உள்ளிட்ட அனைத்து மைதான கட்டமைப்பு இட வசதியுடன் உள்ள இடத்தில் வகுப்பறை கட்டடங்கள் எழுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கூறினர்.மேலச்செல்வனுார் ஊராட்சி தலைவர் மகரஜோதி கூறியதாவது; ஐந்து ஏக்கரில் பள்ளி கட்டடம் எழுப்பினால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் புதிய கட்டடம் எழுப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை