உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் பூஜாரிகள் நலச் சங்க மாவட்ட ஆலோசனை கூட்டம்

கோயில் பூஜாரிகள் நலச் சங்க மாவட்ட ஆலோசனை கூட்டம்

கடலாடி: ராமநாதபுரம் மாவட்ட கோயில் பூஜாரிகள் நலச் சங்க பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடலாடியில் நடந்தது. தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சங்க மாநில தலைவர் பி.வாசு முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சுந்தரம், சேலம் மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கூரியய்யா, மகளிர் அணி தலைவி சண்முகசுந்தரி உட்பட 11 ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஓய்வூதியம் பெற்று வரும் பூஜாரிகள் இறப்பிற்கு பின் அவர்கள் மனைவிக்கு அந்த ஊதியத்தை வழங்க வேண்டும் என தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நல வாரியத்தை விரைவில் செயல்படுத்தி பூஜாரிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.ராமேஸ்வரம் உள்ளிட்ட பெரிய கோயில்களுக்கு தானமாக வரும் மாடுகளை இலவசமாக பூஜாரிகளுக்கு வழங்க வேண்டும் என கலெக்டர் கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் இதுவரை எந்த மாடும் பூஜாரிக்கு வழங்கப்படவில்லை.ஒரு கால பூஜை செய்யும் கோயிலுக்கு மின் கட்டணத்தை ஹிந்து சமய அறநிலைத்துறையே செலுத்தும் என அறிவித்தும் இதுவரை மின்கட்டணத்தை பூஜாரிகளே செலுத்தி வருகின்றனர். எனவே அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை