மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
2 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
2 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
2 hour(s) ago
ராமநாதபுரம் : முதுகுளத்துார் பேரூராட்சியுடன் காக்கூர் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.காக்கூர் ஊராட்சி தலைவர் ஜெயமணி, ஊர் தலைவர்கள் தமிழரசன், முனியசாமி மற்றும் ஊர் மக்கள் கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:முதுகுளத்துாரில் இருந்து 6 கி.மீ.,ல் காக்கூர் ஊராட்சி உள்ளது. இங்கு 1000 குடும்பங்களில் 4000த்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயத் தொழில் பிரதானமாக உள்ளது. ஏராளமானவர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் முதுகுளத்துார் பேரூராட்சியுடன் காக்கூரை இணைத்தால் நுாறு நாள் வேலை பறிபோகும். கூடுதல் வரிச்சுமையால் மக்கள் சிரமப்படுவோம். எனவே இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago