உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பசும்பொன்னில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

பசும்பொன்னில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63ம் ஆண்டு குருபூஜை விழா அக்.,30ல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தியான மண்டபத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் தலைமை வகித்தார். டி.வாடிப்பட்டி பொன் கருப்பையா, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் நவமணி, தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியர் நேதாஜி சுவாமிநாதன், மாணவர் சங்கம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிவ தொண்டர்கள் கணேசன், தாமரைசெல்வி, முத்துபாண்டி, மகேந்திரபூபதி திருவாசகம் வாசித்தனர். விழாவில் நிர்வாகிகள், பொதுமக்கள், சிவாசாரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கம் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை