உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கான திருக்குறள் போட்டி

மாணவர்களுக்கான திருக்குறள் போட்டி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தமிழ்சங்கம் சார்பில், பட்டணம்காத்தான் பாரதிநகர் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தன.சங்கமாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் சந்திரசேகர், பள்ளித்தாளாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் ஒப்புவித்தல், எழுதல், பேச்சு, கட்டுரை போட்டியில் ஒன்று முதல் பிளஸ் 2 மாணவர்களும், கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ