உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  துாய்மை பணிக்காக ரூ.5.58 லட்சத்தில் மூன்று மின்கல பேட்டரி வாகனங்கள்

 துாய்மை பணிக்காக ரூ.5.58 லட்சத்தில் மூன்று மின்கல பேட்டரி வாகனங்கள்

தொண்டி: தொண்டி பேரூராட்சி யில் உள்ள 15 வார்டுகளில் 200க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளி யேறும் குப்பை கழிவுகளை பேட்டரி வாகனம் மற்றும் தள்ளு வண்டிகளில் துாய்மைப் பணி யாளர்கள் பெற்று செல்கின்றனர். அவ்வாறு சேகரிக்கும் குப்பை கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பை கழிவுகள் மறு சுழற்சி முறைக்கும், மக்கும் குப்பை கழிவுகள் இயற்கை உரம் தயாரித்தல் போன்றவைக்கும் பயன் படுத்தப்படுகிறது. தொண்டி பேரூராட்சியில் குப்பை எடுத்து செல்ல பயன்படுத்தும் பேட்டரி வாகனங்கள் போது மானதாக இல்லாததால் கூடுதலாக வழங்க கோரிக்கை எழுந்தது. அதன்படி நகர்புற மேம்பாட்டு திட்டம், மூலதன மானிய திட்டத்தில் ரூ.5.58 லட்சத்தில் 3 மின்கல பேட்டரி வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு தலைமை வகித்தார். செயல் அலு வலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை