உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் - சரக்கு வாகனம் மோதல் மதுரையை சேர்ந்த மூவர் பலி

டூவீலர் - சரக்கு வாகனம் மோதல் மதுரையை சேர்ந்த மூவர் பலி

பரமக்குடி:- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையை டூவீலரில் கடக்க முயன்ற மதுரை கட்டட தொழிலாளர்கள் மூவர் , சரக்கு வாகனம் மோதி பலியாயினர்.மதுரை ஆனையூர் பட்டயக்கிழவன் மகன் மொக்கராஜா 20. பீ.பி.குளம் வேலுச்சாமி மகன் மணிகண்ட பிரபு 20. தெற்கு வாசல் பாலகிருஷ்ணன் மகன் கார்த்திக் 20. நண்பர்களான மூவரும் பரமக்குடி பார்த்திபனுார் அருகே கட்டட பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு பார்த்திபனுாருக்கு மூவரும் ஒரே டூவீலரில் சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பினர். மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையின் குறுக்கே டூவீலரில் கடந்தனர். அப்போது பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு வாகனம் மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். சரக்கு வாகன டிரைவரை, பார்த்திபனுார் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்