உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோதண்டராமசாமி கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா

கோதண்டராமசாமி கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா

பரமக்குடி : பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று ஆஞ்சநேயர் பரமபத நாதனாக அருள் பாலித்தார்.இக்கோயிலில் புளிய மரத்தில் ஆஞ்சநேயர் மரமாக நின்று புனிதப்புளி ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அனுமன் ஜெயந்தி விழா ஜன.7 மாலை திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது. தினமும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.நேற்று மாலை புஷ்ப கேடயத்தில் ஆஞ்சநேயர் கதாயுதம் ஏந்தி பரமபத நாதனாக வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நாளை காலை அனுமன் ஜெயந்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபடுவர்.*இதேபோல் பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் சுந்தர் நகரில் அருள் பாலிக்கும் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி