உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மீனவ பெண்களுக்கு பயிற்சி

 மீனவ பெண்களுக்கு பயிற்சி

தொண்டி: மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் மீனவ மகளிர் குழுக் களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப் படுகிறது. தொண்டி மீன்வளத் துறை ஆய்வாளர் அபுதாகிர் கூறியதாவது: தொண்டி பகுதி மீனவப் பெண்களுக்கு கடல் பாசி வளர்த்தல், மீன் பதப் படுத்துதல், வலை பின்னுதல், நண்டு வளர்த்தல், கடல் சிற்பி அலங்கார பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சி கள் இலவசமாக அளிக்கப் படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக இப்பயிற்சிகள் அளிக்கப்படும். தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மீனவர்கள் அருகில் உள்ள மீன்வளத்துறை அலு வலகத்தை அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை