உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஆர்ப்பாட்ட அனுமதி  கோரி த.வெ.க., மனு

 ஆர்ப்பாட்ட அனுமதி  கோரி த.வெ.க., மனு

ராமநாதபுரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை (எஸ்.ஐ.ஆர்.,) கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு த.வெ.க., ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் கமிஷனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தற்போது துவங்கவுள்ளது. இதில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டுள்ளதால் வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து த.வெ.க., சார்பில் இன்று (நவ.,16) மதியம் 12:00 மணிக்கு அரண்மனை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். த.வெ.க., நிர்வாகிகள், பொதுமக்கள் என 1000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ