உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  உதயநிதி பிறந்தநாள் விழா கபடி போட்டி

 உதயநிதி பிறந்தநாள் விழா கபடி போட்டி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கபடி போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக 20 ஆயிரத்து 49 ம், இரண்டாம் பரிசாக 15 ஆயிரத்து 49ம், மூன்றாம் பரிசாக 10 ஆயிரத்து 49ம், நான்காம் பரிசாக 9 ஆயிரத்து 49ம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தி.மு.க., வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயவீர முத்தையா செய்திருந்தார். இளைஞர் அணியினர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை