உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இணைப்பு சாலையாக வலமானுார் விலக்கில் இருந்து கொத்தியார் கோட்டை வழியாக மேட்டுச் சோழந்துார் செல்லும் விலக்கு ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள பத்துக்கு மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் இரு புறங்களிலும் சீமைக்கருவேலம் சூழ்ந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை