உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  துணை ஜனாதிபதி ராமேஸ்வரம் வருகை: அதிகாரிகள் ஆய்வு

 துணை ஜனாதிபதி ராமேஸ்வரம் வருகை: அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம்: - ராமேஸ்வரத்தில் நடக்கும் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். இதற்காக ஹெலிபேட் தளத்தை கலெக்டர், எஸ்.பி., மாநில பாதுகாப்பு உயர்அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். டிச., 30ல் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் தங்கும் விடுதி வளாகத்தில் நடக்கவுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இவர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் வந்திறங்கி, பின் காரில் ராமேஸ்வரம் வர உள்ளார். இதற்காக மண்டபத்தில் உள்ள ஹெலிபேட் தளத்தில் மழை நீரை அகற்றி, இத்தளத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இத்தளத்தை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி.சந்தீஷ், மாநில பாதுகாப்பு உயர்அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின் ராமேஸ்வரத்தில் அமையும் விழா மேடையை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை