உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / களக்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு 4 கி.மீ., அலையும் கிராம மக்கள்

களக்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு 4 கி.மீ., அலையும் கிராம மக்கள்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே மல்லல் ஊராட்சிக்குட்பட்ட களக்குடி மற்றும் கோகுலபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தள்ளுவடியில் 4 கி.மீ., சென்று குடிநீர் எடுத்து வந்து மக்கள் சிரமப்படுகின்றனர். களக்குடி மற்றும் கோகுலபுரம் கிராமத்தில் குழாய்களில் முறையாக தண்ணீர் வினியோகம் செய்யாமல் காட்சி பொருளாகவே உள்ளது. காவிரி நீர் வரத்து இல்லாததால் பொதுமக்கள் குடம் தண்ணீர் ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். களக்குடி கிராம பொதுமக்கள் கூறியதாவது: இங்கு புழக்கத்திற்கான கிணறு தரை மட்டத்தில் உள்ளதால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அப் பகுதியில் சென்று தண்ணீர் எடுப்பது விபத்து அபாயத்துடன் உள்ளது. எனவே கூடுதலாக கிணற்று உறைகள் அமைத்தால் பாதுகாப்பாக தண்ணீர் எடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். குடிநீருக்காக அருகிலுள்ள எக்ககுடி, நல்லாங்குடி உள்ளிட்ட கிராமங் களுக்கு தள்ளுவண்டி யுடன் 4 கி.மீ., தொலைவிற்கு பயணித்து குடங்களில் தண்ணீர் சேகரித்து வருகிறோம். எனவே தமிழ்நாட்டு குடிநீர் வடிகால் வாரியத்தினர் இப்பகுதியில் குடிநீர் கிணறு அமைத்து முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாக பல இடங்களில் உள்ளது. பயணியர் நிழற்குடை கட்டுவதில் ஆர்வம் காட்டும் நிர்வாகத்தினர். குடிநீர் சேவையை பூர்த்தி செய்யாமல் உள்ளது வருத்தம் அளிக்கிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை