உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவேகானந்தர் பரமக்குடி விஜயம் செய்த நாள் விழா

விவேகானந்தர் பரமக்குடி விஜயம் செய்த நாள் விழா

பரமக்குடி- சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாடு சென்று பரமக்குடிக்கு விஜயம் செய்த நாள், 161 வது ஜெயந்தி விழா பரமக்குடியில் நடந்தது.வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் ஆன்மிக எழுச்சி உரையாற்றினார். தொடர்ந்து ராமநாதபுரம் வந்தவர் 1897 பிப்.1ல் பரமக்குடி வந்தார். அப்போது தற்போதுள்ள நகராட்சி அலுவலகம் அருகில் குமரன் வைகை ஆறு படித்துறையில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.இதையடுத்து பரமக்குடிக்கு அவர் விஜயம் செய்த நாள் மற்றும் 161 வது ஜெயந்தி விழா, பருத்தியூர் ராமலிங்க சுவாமி கோயில் வளாகத்தில் நடந்தது. ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் தலைமை வகித்து பேசினார்.பரமக்குடி சேக்கிழார் விருது பெற்ற பெருமாள், விவேகானந்தர் விஜயம் குறித்து பேசினார். ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவா மந்திர் சிவராம் வாழ்த்தினார். பரமக்குடி ராமகிருஷ்ண ஞான வழிபாட்டு மன்றத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை