உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குருவாடியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை காணவில்லை நோட்டீஸ் ஒட்டி வார்டு உறுப்பினர் புகார்

குருவாடியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை காணவில்லை நோட்டீஸ் ஒட்டி வார்டு உறுப்பினர் புகார்

சாயல்குடி : -சாயல்குடி அருகே அவத்தாண்டை ஊராட்சிக்கு உட்பட்ட குருவாடி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை ஜன.3ல் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது.கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையில் 2020ல் புதிதாக டைல்ஸ் ஒட்டி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்ததாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவதாண்டை ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் ராஜபாண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.குருவாடியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் ராஜபாண்டி கூறியதாவது:ஊராட்சியில் போட்டியின்றி ஏகமனதாக ஊராட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். மே 2022ல் துணைத்தலைவர் பதவி ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனரால் நீக்கப்பட்டது. 9வது வார்டு உறுப்பினராக பணியாற்றி வருகிறேன்.குருவாடியில் நன்றாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை கடந்த ஜன.3ல் இடித்து விட்டனர். பயணிகள் நிழற்குடையை கடந்த செப்.14ல் அடித்தளம் அமைத்ததாக கூறி ரூ.7 லட்சத்திற்கு பில் எடுத்துள்ளனர். இந்த விஷயம் ஆன்லைன் மூலமாக எனக்கு தெரிய வந்தது. பணி செய்யாத வேலைகளுக்கு போலியாக புகைப்படம் எடுத்து லட்சக்கணக்கில் நிதி மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விழிப்புணர்வு வால்போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்றார்.எம்.பி., நவாஸ் கனியின் தாயார் ரம்ஜான் பீவி தான் அவதாண்டை ஊராட்சித் தலைவராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை