உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

திருவாடானை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

திருவாடானை:திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஊராட்சி செங்கமடை, அழகமடை ஊர்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். இது குறித்து செங்கமடை சுந்தரபாண்டி கூறியதாவது: குடிநீர் வராததால் தற்போது பெய்த மழையால் ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துகிறோம்.வசதியுள்ளவர்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவேஉடனடியாக குடிநீர் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை