உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடியில் ரோடுகளில் தேங்கிய தண்ணீர்

 பரமக்குடியில் ரோடுகளில் தேங்கிய தண்ணீர்

பரமக்குடி: பரமக்குடியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் ரோடுகளில் தண்ணீர் தேங்கியது. நகராட்சி பகுதியில் தார் ரோடுகள் சேதமடைந்தன. மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இரண்டு நாட்களாக பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன், நெடுஞ்சாலை ஓரங்களில் மழை நீர் கடந்து செல்ல வழியின்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் நெடுஞ்சாலை பாரதி நகர், வசந்தபுரம் பகுதிகளில் வடிகால் அமைக்கப்பட்டும் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் செல்ல வழியில்லை. மேலும் நகராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அமைக்கப்பட்ட தார் ரோடுகள் அனைத்தும் பெயர்ந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதுடன் ரோட்டில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. ஆகவே நெடுஞ்சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதுடன், நகராட்சி ரோடுகளை உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை