உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  எமனேஸ்வரம் தெற்கு ரத வீதியில் கால்வாய் பாலம் கட்டுவது எப்போது

 எமனேஸ்வரம் தெற்கு ரத வீதியில் கால்வாய் பாலம் கட்டுவது எப்போது

ஆறு மாதங்களாக மக்கள் அவதிபரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் தெற்கு ரத வீதியில் இருந்து பெருமாள் கோயில் செல்லும் பாதையின் குறுக்கே உள்ள கால்வாய் பாலம் 6 மாதங்களா அமைக்கப்படாததால் மக்கள் அவதி அடைகின்றனர். பரமக்குடி நகராட்சியில் ரோடுகளின் குறுக்கே செல்லும் கழிவுநீர் கால்வாய் பாலங்கள் இடிந்த நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் கழிவு நீருடன் மழை நீர் செல்ல முடியாமல் உள்ளதால் உயர்த்தி அமைக்கப்படுகின்றன. புது நகர், வைகை நகர் உட்பட விரிவு படுத்தப்பட்ட பல்வேறு தெருக்களில் கல்வெட்டு பாலங்கள் தரையுடன் ஒட்டி இருக்கின்றன. இச்சூழலில் எமனேஸ்வரம் தெற்கு ரத வீதியில் குறுக்கே செல்லும் கல்வெட்டு பாலம் அமைக்க 6 மாதத்திற்கு முன்பு பழைய வாறுகால் பாலம் அகற்றப்பட்டது. அதன் பின் பாலம் அமைக்கும் பணி நடக்காததால் கோயில் செல்லும் பக்தர்கள் உட்பட அந்த வழியாக டூவீலர், ஆட்டோ என அவசரத்திற்கும் செல்ல முடியாமல் மக்கள் அவதிப் படுகின்றனர். இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், கவுன்சில் கூட்டங்களிலும் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. ஆகவே பாலம் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ