உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பள்ளி முன் ஆபத்தான பள்ளம் எப்போதான் சரி செய்யப்படுமோ

 பள்ளி முன் ஆபத்தான பள்ளம் எப்போதான் சரி செய்யப்படுமோ

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு உள்ள ஆபத்தான பள்ளத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர். கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் கொண்டுலாவி, கிடாத்திருக்கை, ஏனாதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பருவமழை காலத்தில் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற பள்ளி முன்பு கால்வாய் தோண்டப்பட்டு தண்ணீரை வெளியேற்றினர். அதன் பிறகு கால்வாய் மூடப்படாமல் விடப்பட்டுள்ளது. தற்போது பள்ளம் ஏற்பட்டு கிராமத்தில் நடந்து செல்லும் பெண்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. பள்ளி முன்பு ஆபத்தான பள்ளம் இருப்பதால் அச்சத்துடன் மாணவர்கள் செல்கின்றனர். இதனால் அசம்பா விதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை