உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமநாதபுரம் கல்லுாரியில் இளைஞர் விழா 

 ராமநாதபுரம் கல்லுாரியில் இளைஞர் விழா 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை- அறிவியல் கல்லுாரியில் இளைஞர் விழா நடந்தது. விழாவை அழகப்பா பல்கலை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப் பாளர் நடராஜன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா இளைஞர் அலு வலர் சாமியேக் எச் மேசிராம் பேசினார். மாவட்ட கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா பங்கேற்றனர். உதவிப்பேராசிரியர்கள் சக்திவேல், ஜெனாப் தைமியா, நிர்வாக அலு வலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி