உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பைக்கில் பறக்கும் இளைஞர்கள்: கண்டுகொள்ளாத போலீசார்

பைக்கில் பறக்கும் இளைஞர்கள்: கண்டுகொள்ளாத போலீசார்

கீழக்கரை : -கீழக்கரை, திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் அதிவேகத் திறன் கொண்ட டூவீலரில் பயணிக்கும் இளைஞர்களால் விபத்து அபாயம் உள்ளது. இவ்விஷயத்தில் போலீசாரின் நடவடிக்கை பெயரளவில் உள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.கீழக்கரை, திருப்புல்லாணி ஆகிய இடங்களில் 18 வயது ஆகாத லைசன்ஸ் கூட இல்லாமல், இளைஞர்கள் சிலர் பிறரை கவர்வதற்காக டூவீலரில் சைலன்சரை எடுத்து விட்டு ஒட்டி செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மற்ற வாகனங்களுக்கு இடையூறாகவும் பொது மக்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அதிவேகத் திறன் கொண்ட டூவீலரில் சத்தத்துடன் டூவீலர் ஒட்டி செல்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். எனவே அதிவேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. அம்மாதிரியான இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி