உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / 800 செம்மரம் வெட்டி நாசம்

800 செம்மரம் வெட்டி நாசம்

அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த மிட்டபேட்டை பகுதியை சேர்ந்த சங்கரன், 48. இவர் குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வருகிறார்.அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டை பகுதியில் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் வருவாய் துறை அனுமதி பெற்று 2,500 செம்மர கன்று வளர்த்து வந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் 800 செம்மர கன்றுகளை வெட்டி சாய்த்து நாசம் செய்திருந்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். செம்மர கன்றுகளை வெட்டி நாசம் செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை