மேலும் செய்திகள்
வங்கியில் மோசடி ஊழியர் கைது
25-Nov-2025
டூ வீலர் - கார் மோதல் மூன்று வாலிபர்கள் பலி
21-Nov-2025
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை ஆற்றில் மூழ்கி பலி
10-Nov-2025
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, இறந்தவர்களின் பெயரில், தி.மு.க.,வினர் கள்ள ஓட்டுப் போட்டதை கண்டித்து, பா.ம.க., வேட்பாளர் பாலு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் சிட்டிங் எம்.பி., ஜெகத்ரட்சகன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க., வேட்பாளர் பாலு, ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் மோட்டூர் கிராமத்தில் உள்ள நிதி உதவி தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில், தி.மு.க.,வினர் இறந்தவர்களின் பெயரில், திருட்டு ஓட்டுப் போடுவதாக, பா.ம.க., வேட்பாளர் பாலுவிற்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு சென்று, தேர்தல் அதிகாரிகளிடம் இறந்தவர் பெயரில் எப்படி ஓட்டுப் போட முடியும் என கேட்டு, வேட்பாளர் பாலு முறையிட்டார். அங்கிருந்த அதிகாரிகள், முறையாக பதில் கூறாமல் தொடர்ந்து ஓட்டுப்பதிவில் மும்முரமாக ஈடுபட்டனர்.ஆத்திரமடைந்த பா.ம.க., வேட்பாளர் பாலு, தனது ஆதரவாளர்களுடன், ஓட்டுச்சாவடி முன் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.வேட்பாளர் பாலு கூறுகையில், ''ஓட்டுப்பதிவு மையத்தில் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்,'' என்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
25-Nov-2025
21-Nov-2025
10-Nov-2025