மேலும் செய்திகள்
வங்கியில் மோசடி ஊழியர் கைது
25-Nov-2025
டூ வீலர் - கார் மோதல் மூன்று வாலிபர்கள் பலி
21-Nov-2025
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை ஆற்றில் மூழ்கி பலி
10-Nov-2025
வாலாஜா:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அரப்பாக்கத்தை சேர்ந்தவர் சுதாகர், 42. இவர், வாலாஜா அடுத்த செங்காடு கிராமத்தில், கடந்த பிப்ரவரியில் வீட்டுமனை வாங்கினார். அதனை, சப்-டிவிஷன் செய்ய, வாலாஜா தாலுகா அலுவலகத்தில் மனு அளித்து, அதற்குரிய கட்டணத்தையும் செலுத்தினார். நில அளவையர் அரவிந்த், 26, வீட்டுமனை சப் -டிவிஷன் மற்றும் பெயர் மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து, ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசனிடம், சுதாகர், ஜெயராமன் ஆகியோர் புகார் அளித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 3,000 ரூபாயை அரவிந்திடம், சுதாகர் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அரவிந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
25-Nov-2025
21-Nov-2025
10-Nov-2025