மேலும் செய்திகள்
வங்கியில் மோசடி ஊழியர் கைது
25-Nov-2025
டூ வீலர் - கார் மோதல் மூன்று வாலிபர்கள் பலி
21-Nov-2025
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை ஆற்றில் மூழ்கி பலி
10-Nov-2025
நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளியில், மெக்கானிக் பட்டறையில் புகுந்த மர்மநபர்கள், 20 கார்களில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றுள்ளனர். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சின்னமூக்கனுாரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் லோகநாதன், 44, மற்றும் செந்தில்குமார், 40; இருவரும், நாட்றம்பள்ளியில் கார் மெக்கானிக் பட்டறை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். கடையில், 2 தொழிலாளர்கள் துாங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் பட்டறையில் புகுந்த மர்ம நபர்கள், வாடிக்கையாளர்கள் பழுது பார்க்க விட்டு சென்றிருந்த, 20 கார்களில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர். நேற்று காலை பேட்டரிகள் திருட்டு போனதை அறிந்த லோகநாதன், செந்தில்குமார் ஆகியோர் புகார் படி, நாட்றம்பள்ளி போலீசார் கடையிலுள்ள, 'சிசிடிவி' காட்சி பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
25-Nov-2025
21-Nov-2025
10-Nov-2025