உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / ரயில் முன் பாய்ந்த தாய் 2 மகளுடன் தற்கொலை

ரயில் முன் பாய்ந்த தாய் 2 மகளுடன் தற்கொலை

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் அடுத்த வேலம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன், 40, முன்னாள் ராணுவ வீரர். இவரது, இரணடாவது மனைவி வெண்ணிலா, 35. இவர்களது மகள்கள் தார்ணிகா, 7, ஜெனிஸ்ரீ, 5. அறிவழகனின் முதல் மனைவி விஜயலட்சுமி, 36, கருத்து வேறுபாடால் விவாகரத்து கோரியிருந்தார். ஆனால், விவாகரத்து பெறாத நிலையில், மீண்டும் அறிவழகனுடன் சேர்ந்து வாழ, அவரது வீட்டிற்கு வந்தார்.இதனால், அறிவழகனுக்கும், இரண்டாவது மனைவி வெண்ணிலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மனமுடைந்த வெண்ணிலா தன், இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.அம்மூர் பகுதியில், காட்பாடி - சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த, 'அந்தியோதயா' ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், 3 பேரும் உடல் சிதறி பலியாயினர். காட்பாடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை