மலைப்பாதையில் விபத்து காயம் அடைந்த பெண் பலி
ஏற்காடு,:சேலம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரேவதி, 42. கணவர் இறந்துவிட்டார். வீட்டு வேலை செய்து வந்த ரேவதி, கடந்த, 9ல், விஜய் என்பவருடன், 'டியோ' மொபட்டில் ஏற்காடு சென்றார். அன்று மாலை சேலத்துக்கு புறப்பட்டனர். மலைப்பாதை, 17வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, ரேவதி நிலை தடுமாறி விழுந்ததில் தலை, உடலில் படுகாயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, ரேவதிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ரேவதியின் மகன் தமிழரசன் புகார்படி, ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.