அரவக்குறிச்சி : கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது, அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில், தந்தை, மகள், மாமியார் உடல் நசுங்கி பலி-யாகினர். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சூளை ஆர்.கே.நகரை சேர்ந்தவர் கிருஷ்ண-குமார், 40; மனைவி மோகனா, 40; மகன் சுதர்சன், 15; மகள் வருணா,10; மற்றும் மாமியர் இந்திராணி, 67, ஆகியோர், கடந்த, 20ம் தேதி மாலை, திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு வேகன் ஆர் காரில் சென்றனர். அங்கு சுவாமி தரிசனத்தை முடித்-துவிட்டு, மீண்டும் ஈரோடு நோக்கி புறப்பட்டனர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மதுரை - கரூர் தேசிய நெடுஞ்சாலை, ஆண்டிப்பட்டி கோட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த வேலா மரத்தின் மீது மோதி விபத்-துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.இதில், காரை ஓட்டிச் சென்ற கிருஷ்ணகுமார், மகள் வருணா, மாமியார் இந்திராணி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரி-தாபமாக உயிரிழந்தனர். மனைவி மோகனா, மகன் சுதர்சன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவ-ரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அரவக்கு-றிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்-பத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களி-டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.