உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாஜி மந்திரியின் கட்டுப்பாட்டில்தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்

மாஜி மந்திரியின் கட்டுப்பாட்டில்தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தராக முருகேசபூபதி உள்ளார். கடந்த ஆட்சியில், வேளாண் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளராக பணியாற்றியவர் தான் முருகேசபூபதி. இவர், மாஜிக்கு, நெருக்கமான கவுசிகபூபதியின் சகோதரர். அந்த அதிர்ஷ்டத்தால், துணைவேந்தராக முருகேசபூபதி நியமிக்கப்பட்டார். வேளாண் பல்கலை மட்டுமல்ல, அது தொடர்பான அனைத்து அலுவலகங்களும், இன்றளவும் மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.சேலத்தை சேர்ந்த, 'பன்னீர்' மரத்தின் பெயரை கொண்ட, தி.மு.க., முக்கிய புள்ளி ஒருவர், ஏற்காட்டில் மரம் வெட்டுவதை முதன்மை தொழிலாக கொண்டுள்ளார். தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மரம் வெட்டுவது, அவற்றை வனத்துறையினரின் கண்ணை மறைத்து, எடுத்து செல்வது போன்றவற்றில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு என, வனத்துறையினர் வெளிப்படையாக கூறுகின்றனர். சமீபத்தில், பெர்மிட்டை மாற்றி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பெரிய மரங்களை லாரிகளில் எடுத்து சென்றுள்ளனர். வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் கிடைத்து, ஆராய்ச்சி நிலையத்தின் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஏற்காட்டில், மரம் வெட்டுவது குறித்து கேட்டால், மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரை பயன்படுத்தி, நான் இருக்கிறேன், எனக்குரிய கமிஷனை கொடுத்து விட்டு, மரங்களை எடுத்து செல் என, மர வியாபாரிகளிடம் கூறி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ