| ADDED : ஆக 20, 2024 03:16 AM
பனமரத்துப்பட்டி: சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியிலிருந்து பனமரத்துப்பட்டிக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. சாலையோரம், 75 ஆண்டுகள் கடந்த வயதான புளிய மரங்கள் உள்ளன. நேற்று, முன்தினம் இரவு மழை பெய்த சமயத்தில், பாலிடெக்னிக் கல்லுாரி எதிரில் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது. வேர்கள், கரையான் அரிக்கப்பட்டு உறுதி தன்மையை இழந்த நிலையில் புளிய மரம் இருந்தது. அது, சாலையில் விழாமல், பூட்டி கிடக்கும் தாபா ஓட்டல் பக்கம் சாய்ந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையோரத்தில், நிறைய மரங்கள் வேர் பகுதியில் பொந்து ஏற்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் சாலையில் விழும் நிலையில் உள்ளது. மழை மற்றும் காற்று வீசும் சமயங்களில், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.