உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நடிகர் ரஞ்சித் காரை மறித்து வி.சி.,யினர் ஆர்ப்பாட்டம்

நடிகர் ரஞ்சித் காரை மறித்து வி.சி.,யினர் ஆர்ப்பாட்டம்

ஓமலுார்: தமிழகத்தில், 'கவுண்டம்பாளையம்' படம் நேற்று வெளியானது. அந்த படத்தை இயக்கி நடித்த, நடிகர் ரஞ்சித், சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் அந்த படத்தை பார்த்தார். மதியம், ஓமலுார் ஆர்.சி.செட்டிப்பட்டி அருகே தர்மபுரி செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ரஞ்சித் சாப்பிட்டார்.தொடர்ந்து ஓட்டலில் இருந்து வெளியே வந்து காரில் ஏறினார். அப்போது, வி.சி., கட்சியின், சேலம் வடக்கு மாவட்ட செயலர் தெய்வானை உள்பட சிலர், ரஞ்சித் காரை மறித்து கோஷம் எழுப்பினர். 10 நிமிடங்களுக்கு பின் ரஞ்சித் தர்மபுரி நோக்கி புறப்பட்டார். இச்சம்பவம் குறித்து, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.மேலும் கருப்பூர் தியேட்டரில் வெளியான கவுண்டம்பாளையம் படம் மாலையில் நிறுத்தப்பட்டது. அதேநேரம் ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே தங்கம் தியேட்டரில் போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !