சேலம்: வட்டார வள பயிற்றுனர், 20 பேர் பணி இடங்-களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால், ஆக., 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்படும், 20 வட்டாரங்களில், ஒரு வட்டாரத்துக்கு ஒருவர் வீதம், 20 வட்டார வள பயிற்றுனர் தற்காலிக பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் எழுத்து, நேர்முகத்-தேர்வு மூலம், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்-ளனர்.பெண்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்-களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2024 மார்ச், 1ல், 25 வயது முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழு, கூட்டமைப்பு உள்-ளிட்டவற்றில், 2 அல்லது 3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் பேச தெரிந்தவராக இருக்க வேண்டும். வட்டார வள முன்னாள் பயிற்றுனர்களாக இருந்தவர்க-ளுக்கும், அடிப்படை கணினி அறிவு பெற்றவர்க-ளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோர், ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு மட்டும் நியமிக்கப்படுவர்.விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமோ, 'திட்ட இயக்குனர், மாவட்ட மேலாண் அலகு, அறை எண்: 207, கலெக்டர் அலுவலகம், சேலம்' எனும் முகவரிக்கு, ஆக., 6 மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.