உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.20,000 கோடி மின்கட்டணத்தை வசூலிக்க முடியாத தி.மு.க., அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் குற்றச்-சாட்டு

ரூ.20,000 கோடி மின்கட்டணத்தை வசூலிக்க முடியாத தி.மு.க., அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் குற்றச்-சாட்டு

சேலம் : ''தனியாரிடம் நிலுவையில் உள்ள, 20,000 கோடி ரூபாய் மின் கட்டணத்தை வசூலிக்க, தி.மு.க., ஆட்சியாளர்களால் முடிய-வில்லை. மின் கட்டண உயர்வால் வணிகர்கள் தொழிலை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் குற்றம்சாட்டினார்.அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்-தது. மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். இதில் தமிழகத்தில், 3ம் முறை மின் கட்டணத்தை உயர்த்தியும், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்காமல் மக்களை வஞ்சித்து வரும், தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.இலக்கிய அணி செயலர், முன்னாள் அமைச்சர் வைகைச்-செல்வன் பேசியதாவது:நாட்டில் தமிழகத்தில் தான் வீட்டு வாடகையை விட மின் கட்-டணம் அதிகமாக உள்ளது. தி.மு.க., ஆட்சியில் தான் இறந்து போனவர்களும் ஓட்டுப்போட, ஓட்டுச்சாவடிகளுக்கு வருகின்-றனர். அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட, 100 யூனிட் இல-வச மின்சாரத்தால் ஒரு கோடி பேர் பயன் பெற்றனர். தற்போது தனியாரிடம் நிலுவையில் உள்ள, 20,000 கோடி ரூபாய் மின் கட்-டணத்தை வசூலிக்க, தி.மு.க., ஆட்சியாளர்களால் முடிய-வில்லை. மின் கட்டண உயர்வால் வணிகர்கள் தொழிலை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.'பீக் ஹவர்' பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்-காமல், ஏழை மக்களை, தி.மு.க., அரசு நசுக்கி வருகிறது. தர-மற்ற அரிசியை வழங்குகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், மாநகர அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்-திரன், பகுதி, வட்டம், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பங்கேற்-றனர்.அதேபோல் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் ஆத்துார், ராணிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில், ''லோக்சபா தேர்-தலில், தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டுப்போட்டதற்கு பரிசாக மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய் நிறுத்-தப்பட்டுள்ளது,'' என்றார்.முன்னாள் அமைச்சர் செம்மலை பேசுகையில், ''கடந்த, 200 நாட்களில், 595 கொலைகள் நடந்துள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையை, 'காலைக்-கதிர்' நாளிதழ் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், விஷச்சாராயம், கொலை, கொள்ளை அதிகரித்துள்-ளது,'' என்றார்.எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்களான ஆத்துார் ஜெயசங்-கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஓமலுார் மணி, வீரபாண்டி ராஜ-முத்து, சங்ககிரி சுந்தரராஜன், ஏற்காடு சித்ரா உள்பட பலர் பங்-கேற்றனர். முன்னதாக மின் கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., வக்கீல் அணி நிர்வாகி ஜெய்குமார் உள்ளிட்டோர், மின் மீட்டர் படத்தை வைத்து, 'பாடை' கட்டி மேளம் அடித்தபடி ஊர்வல-மாக வந்தனர். தலையில் லாந்தர் விளக்கு வைத்தும், பட்டை நாமம் போட்டபடியும், அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை