உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த தந்தை, மகன் மீட்பு

70 அடி ஆழ கிணற்றில் விழுந்த தந்தை, மகன் மீட்பு

வீரபாண்டி: அரியானுார் அருகே பச்சப்பாலிக்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி, 85. இவர் வீடு அருகே, 70 அடி ஆழ விவசாய கிணறு உள்ளது. அதன் பக்கத்தில் தேன் எடுக்க, நேற்று முன்தினம் மாலை கந்தசாமி சென்றார். அப்போது தவறி கிணற்றில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, மகன் வெங்கடேஷ், 35, தந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். ஆனால் இருவரும் மேலே வர முடியாமல் தத்தளித்தனர்.மக்கள் தகவல்படி ஆட்டையாம்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து கிணற்றில் இறங்கி கயிற்று கட்டில், கயிறுகளை கட்டி இருவரையும் உயிருடன் மேலே கொண்டு வந்தனர். தந்தை, மகனை காப்பாற்றிய தீயணைப்புத்துறையினரை, உறவினர்கள், மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை