ஆத்துார் : பட்டியலின மக்கள் பூஜை பொருட்களுடன் சென்று, முதல்மு-றையாக நடுவலுாரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வழிபட்-டனர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுாரில், 700 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர், அருங்காட்டம்மன், பெரிய அம்மன், சின்ன அம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்-ளன. அக்கோவிலில் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அன்னப்ப-றவை, பூத வாகனம், குதிரை, சுழல் குதிரை, புலி உள்ளிட்ட வாகனங்கள் தனித்தனியே உள்ளன. திருவிழாவின்போது இந்த வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வருவது வழக்கம். அங்கு பட்டியல் இன மக்கள் வழிபட முடியாத நிலை இருந்தது. ஆனால், 2004ல் நடந்த கோவில் திருவிழாவின்போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு தேர் திருவிழா நிறுத்தப்-பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின், திருவிழாவை நடத்த அனைத்து சமுதாயத்தினரும் முன் வந்தனர். இதனால் இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சு நடத்தி, திருவிழா நடத்த அனுமதி வழங்கினர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு திருவிழாவின்போது பட்டியல் இன மக்கள், மாவிளக்கு, தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு, மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். இரவு, 10:30 மணிக்கு, நுழைவாயில் வழியே கோவிலுக்குள் சென்று, பூஜை பொருட்களை கொடுத்-தனர். தொடர்ந்து கருவறை முன் கைலாசநாதர், அருங்காட்-டம்மன் உள்ளிட்ட சுவாமிகளை வழிபட்டனர். நேற்று பெரிய அம்மன், சின்ன அம்மன், அருங்காட்டம்மன் கோவிலில் ஊரணி பொங்கல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்-தர்கள் வழிபட்டனர். இன்று, 21 ஆண்டுகளுக்கு பின் தேர் திரு-விழா நடக்கிறது. இதிலும் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்-கின்றனர்.