உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பொருட்காட்சி நாளை தொடக்கம்

அரசு பொருட்காட்சி நாளை தொடக்கம்

சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. அமைச்சர்கள் நேரு, சாமிநாதன், பொருட்காட்சியை தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி, வருவாய், வேளாண் - உழவர் நலன், கூட்டுறவு, குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், சேலம் மாநகராட்சி என, 34 அரங்குகள் பொருட்காட்-சியில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாலையில் தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து, 45 நாட்கள் பொருட்காட்சி நடத்தப்படும். இதில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்-ளாட்சி பிரதிநிதிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை