உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பழிக்குப்பழி கொலை 4 பேருக்கு குண்டாஸ்

பழிக்குப்பழி கொலை 4 பேருக்கு குண்டாஸ்

சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே காட்டூரை சேர்ந்த ரவுடி ஆனந்தன், 44. இவர் கடந்த ஆண்டு பிப்., 5ல் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட, சுக்-கம்பட்டியை சேர்ந்த சரவணனை, கடந்த நவ., 8ல், ஒரு கும்பல் கொலை செய்தது. இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசார-ணையில், பழிக்குப்பழியாக கொலை நடந்தது தெரிந்தது. தொடர்ந்து, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில், ஓமலுார் அருகே காமலாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், 27, சேலம், பொன்னம்மாபேட்டை ஜீவா, 23, கருப்பூர் அருகே குள்ள-கவுண்டனுார் சாரதி, 20, சூரியா, 23, ஆகியோரை, குண்டர் சட்-டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை