| ADDED : ஆக 19, 2024 06:10 AM
மேட்டூர்: கால்வாய் கரையோரம் குரங்குகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவியர் அச்சப்படுகின்றனர்.மேட்டூர், பொன்னகர் செல்லும் சாலை குறுக்கே கிழக்கு, மேற்கு பாசன கால்வாயில் தண்ணீர் செல்கிறது. கால்வாய் கரையோரம் ஏராளமான வீடுகள் உள்ளன. சமீபகாலமாக அப்பகுதியி-லுள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் முகா-மிட்டுள்ளன. அந்த குரங்குகள் குடியிருப்புகளில் நுழைந்து உணவை எடுத்துச்செல்கின்றன.அப்பகுதி வீடுகளில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரையும் அச்சுறுத்துகின்றன. இதனால் அப்பகுதி பெற்றோர் குழந்தைகளை வெளியே அனுப்பவே தயங்குகின்றனர். குரங்குகளை அங்கிருந்து அகற்றக்கோரி மேட்டூர் நகராட்சி, வனத்துறை அதிகாரிகளிடம் கடந்த மாத இறுதியில் மக்கள் புகார் அளித்தனர்.ஆனால் இரு துறை அலுவலர்களும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.