உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு

வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு

சேலம் : சேலம் மாவட்டம் வனவாசியை சேர்தவர் ராஜலட்சுமி, 85. சேலம், தாதகாபட்டி அம்பாள் ஏரி சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். சில நாட்களாக வீட்டில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இந்நிலையில் துர்நாற்றம் வீச, மக்கள் தக-வல்படி, அன்னதானப்பட்டி போலீசார் வந்து பார்த்தனர். கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ராஜலட்சுமி இறந்து கிடந்ததோடு, உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா, வேறு கார-ணமா என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை