| ADDED : ஆக 20, 2024 03:22 AM
சேலம்: சேலம், சின்ன குள்ளப்பட்டியை சேர்ந்தவர் கோழி பிரகாஷ், 36. தண்டனை கைதியான இவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோழி பிரகாஷ் மீது அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன. இதனால் பரோல் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், பரோலில் விடும்படி மனுதாக்கல் செய்தார். கடந்த 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பரோலில் வீட்டுக்கு சென்ற கோழி பிரகாஷ் மீண்டும் சிறைக்கு சென்றார். நேற்று காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், 15 மாத்திரைகளை கோழி பிரகாஷ் சாப்பிட்டுவிட்டு சிறை காவலரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.