உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதுபாட்டில் பதுக்கி விற்றவர் கைது

மதுபாட்டில் பதுக்கி விற்றவர் கைது

தாரமங்கலம், : கே.ஆர்.தோப்பூர் பகுதியில் தாரமங்கலம் எஸ்.ஐ.,மாதையன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, கே.ஆர்.தோப்பூர் சீனிவாசா தாபா அருகே சந்தேகப்-படும் படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.அவர் சிவகங்கை சூரனத்தை சேர்ந்த சங்கர், 50, என்பதும், அரசு மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனைக்கு வைத்-திருந்தது தெரிந்தது. அவரிடம் இருந்த, 31 மது பாட்டிலை பறி-முதல் செய்த போலீசார், சங்கரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !