உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி விம்ஸ் வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி விம்ஸ் வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி

சேலம்: 'ஹர்கர் திராங்கா' என்பது, 'ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்' கீழ், தேசியக்கொடி மற்றும் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமா-கவும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கிலும், இந்திய அரசால் கடைப்பிடிக்கப்படும் ஓர் பிரசாரம். அதன்படி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்க, பல்கலை மானிய குழு அறிவுறுத்தியது. இதனால் சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு, பல்கலை வேந்தர் கணேசன் வழி-காட்டுதல்படி, 'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி' எனம் கருப்பொருளை மையமாக வைத்து, விழிப்புணர்வு பேரணியை சீரகாபாடியில் நடத்தியது.டீன் செந்தில்குமார், ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., வெங்கடாஜலம் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தனர். துறையை சேர்ந்த மாணவர்கள், தேசிய கொடியை ஏந்தியபடி சென்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப-டுத்தினர். கல்லுாரி நுழைவாயிலில் தொடங்கிய பேரணி, சீரகா-பாடி காந்தி சிலை முன் நிறைவடைந்தது. இதற்கான ஏற்-பாட்டை, நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தன-சேகர், டாக்டர்கள் ஜெயபாலன், ஜமுனா மற்றும் அல்போன்ஸ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ