உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வௌ்ளத்தின் நடுவே 4 நாய்கள் தவிப்பு

வௌ்ளத்தின் நடுவே 4 நாய்கள் தவிப்பு

மேட்டூர், மேட்டூர் அணை உபரிநீர் வெளியேற்றும் பகுதியில் ஆங்காங்கே சிறு, சிறு மலைக்குன்றுகள் காணப்படுகின்றன. கடந்த, 30ல் அணை நிரம்பி உபரிநீர், 16 கண் மதகு வழியே திறக்கப்பட்டது.இதனால் உபரி நீர் வெளியேற்றும் பகுதியில் இருந்த சிறு, சிறு தீவுகளை பெருக்கெடுத்து சென்ற வெள்ள நீர், தீவுகளாக மாற்றியது. அதில் ஒரே தீவில் இரை தேடி சென்ற, 4 நாய்கள் சிக்கி கொண்டன. சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும் நிலையில், 4 நாய்களும் வெளியேற முடியாமலும், போதிய உணவின்றியும் தவித்தன.ஒரு நாய் சிக்கி தவிப்பதாக கிடைத்த தகவலால், அந்த நாய்க்கு உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து தீயணைப்பு, மீட்பு குழுவினர் இரு நாட்களாக, 'டிரோன்' மூலம் பால் பாக்கெட்டுகளை எடுத்து சென்று வழங்கினர். தற்போது, 4 நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளதால், அதை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ