ரூ.13 லட்சத்துக்கு 67 வாகனங்கள் ஏலம்
ரூ.13 லட்சத்துக்கு 67 வாகனங்கள் ஏலம்சேலம்,சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்கள் ஏலம் நேற்று நடந்தது. ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம் தலைமை வகித்தார். அதில், இரு, நான்கு சக்கரம் என, 121 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. 67 வாகனங்கள், 13.09 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, போலீசார் தெரிவித்தனர்.